இலங்கையில் சிறுவர்கள் பட்டினி நிலை; சர்வதேச சமூகத்தினரிடம் டொலரை கோரும் ஐ.நா. சிறுவர் நிதியம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இங்குள்ள சிறுவர்களுக்காக சர்வதேச சமூகத்தினரிடம் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கோரியுள்ளது.

எதிர்வரும் 7 மாதங்களுக்குள் இலங்கையிலுள்ள சிறார்களுக்கு அதிகரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக UNICEF என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், சர்வதேச சமூகத்தினரிடம் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கோரியுள்ளது.

இலங்கையில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய 1.7 மில்லியன் சிறார்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும் போசாக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி மற்றும் உளநல மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் இந்த நிதி கோரப்பட்டுள்ளதாக UNICEF நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 04 மாதங்களுக்குள் பாரிய அனர்த்த நிலையை எதிர்நோக்கக்கூடிய இலங்கை மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால், நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு ஏதேனுமொரு வகையில் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக UNICEF அமைப்பு கூறியுள்ளது.

தற்போதைய நெருக்கடியால் குடும்பங்கள் தங்களை வரையரை செய்துகொண்டுள்ளதாக UNICEFஅமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் துன்பப்படுவதாகவும், பசியுடன் உறங்கச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அநேகமான சிறார்கள் தினமும் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *