இலங்கையில் இந்த ஆண்டு வெடித்த மக்கள் போராட்டங்களின் எண்ணிக்கை! வெளியான அறிக்கை

நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த மூன்று மாத காலத்தில் எரிவாயு, டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெயை கோரி 3,516 ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரையான மூன்று மாதங்களில் சமையல் எரிவாயுவை கோரியே அதிகளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயு கோரி 1185 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பெற்றோலை கோரி 1173 ஆர்ப்பாட்டங்களும், டீசலை கோரி ஆயிரத்து 5 ஆர்ப்பாட்டங்களும், மண்எண்ணெயை கோரி 153 ஆர்ப்பாட்டங்களும் இந்த காலப் பகுதியில் நடத்தப்பட்டுள்ளன.

மே மாதம் 2 ஆம் திகதி முதல் மே மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்திலேயே இவற்றில் அதிகளவான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

அந்த வாரத்தில் நாடு முழுவதும் 1,111 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *