தமிழகம் திருச்சி தடுப்பு முகாமில் கடந்த 24 நாட்களாக இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
விசா காலம் நிறைவடைந்த பின்னர் அந்த நாட்டில் தங்கியிருந்தமை, மற்றும் சட்ட விரோத முறையில் நாட்டுக்குள் நுழைந்தமை போன்ற பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
உணவின்றி குடல் வெந்தாகி விட்டது. வெஞ்சான் சூட்டில் தோல் சுடெரித்தாயிட்டு, ஆனால் தொடர்ந்து 24 நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒரே ஒரு நேர உணவை தவிர்த்து இந்த உச்சி வெயிலில் உட்கார்ந்து பாருங்கள், இங்கு உண்ணாவிரதம் இருப்பவர்களும் மனிதர்கள் தான் என்பதை உணர்வீர்கள்.
ஆனாலும் இப் பெரும் வலியையும் தாண்டி குடும்பத்தோடு ஒரு முறை வாழ்ந்து விட்டு இறந்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
முழுமையாக எங்கள் தமிழ் உறவுகளையே நம்பி விடுதைலை கிடைக்கும் என காத்திருக்கிறோம்.- என்றுள்ளனர்.






பிற செய்திகள்
- யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் விசேட சுற்றிவளைப்பு
- இலங்கையில் சிறுவர்கள் பட்டினி நிலை; சர்வதேச சமூகத்தினரிடம் டொலரை கோரும் ஐ.நா. சிறுவர் நிதியம்
- பாடசாலை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு
- இலங்கையின் தேசியப் பாதுகாப்பில் கேள்விக்கு இடமில்லை! – இராணுவத் தளபதி
- எரிபொருள் விநியோகம் தடைப்படும் சாத்தியம்!
- நெல் சந்தைப்படுத்தல் சபையின் விசேட அறிவித்தல்!
- நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 36 பேர் கைது!