ககன்யான் திட்டம் குறித்து சிவன் கருத்து!

ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்துவது தாமதமாகுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோட்டமாக முதல் ஆளில்லா விண்கலத்தை டிசம்பர் மாதம் செலுத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த ஆளில்லா விண்கலத்தை திட்டமிட்டப்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்துவது என்பது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *