
பசறை,ஜுன் 12
பசறையிலிருந்து மாத்தறைக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் டீசல் டேங்க் மூடியை உடைத்து டீசல் திருட முற்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பஸ் தரிப்பிடத்தில் இன்று காலை 6.30 மணிக்கு மாத்தறைக்கு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திலேயே இவ்வாறு நபர் ஒருவர் டீசல் களவாடமுற்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக கடமை புரிபவர் என தெரியவருகிறது.
இவர் டீசல் களவாட முற்பட்ட வேளையில் பஸ் தரிப்பிடத்தின் காவலாளியினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்றைய தினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்காக நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.