கருவலகஸ்வெவ – ரஜவிகம பிரதேசத்தில் கைவிடப்பட்ட விவசாய காணியொன்றில் இறைச்சி வியாபாரம் செய்த சந்தேகநபர் ஒருவரை துப்பாக்கி மற்றும் ஏனைய சில ஆயுதங்களுடன் வனவிலங்கு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் ரஜவிகம பிரதேசத்தில் 50 ஏக்கர் காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிக்கொண்டிருந்த 40 வயதுடையவர் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள காணியில் இவ்வாறு மிருகங்களை வேட்டையாடி கூடாரங்களை அமைத்து விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் இருந்த தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைதான சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், இரண்டு கோடாரிகள், ஒரு கோடாரி, ஒரு மின் பந்தம், நான்கு தோட்டாக்களின் உறைகள், ஒரு பெரிய கூடாரத் துணி உள்ளிட்ட மேலும் பல பொருட்களைக் கைப்பற்றினர்.
விசாரணையின் போது, சந்தேகநபர் சில காலத்திற்கு முன்னர் சாலியவெவ பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு 30,000 ரூபாவுக்கு விற்பனை செய்த உரிமம் இல்லாத 12 போர வகை துப்பாக்கியையும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பிற செய்திகள்