134 கடலாமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

கொழும்பு,ஜுன் 12

கரையோர காவல்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டின் பல இடங்களில் அடைகாக்கப்பட்ட 222 முட்டைகளிருந்து பொரித்த நூற்று முப்பத்து நான்கு (134) கடலாமை குஞ்சுகள் சமீபத்தில் கடலில் விடப்பட்டதாக இலங்கை கரையோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த கடலாமை குஞ்சுகள் அவற்றின் இயற்கை சூழலுக்கு விடுவிக்கப்பட்டதை பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் கண்டுகளித்தனர்.
கரையோர காவல்படையானது கடலாமை முட்டைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவற்றின் இயற்கை சூழல் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9368 கடலாமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தற்சமயம் 6530 ஆமை முட்டைகள் அடைகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *