மன்னார் வலயக்கல்விப்பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கான 2022 ஆண்டுக்கான
வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி முருங்கன் மைதானத்தில் இரண்டு தினங்கள் இடம்பெற்ற நிலையில் 153 புள்ளிகளை பெற்று மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை முதலிடத்தை பெற்றுள்ளது.
குறித்த மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்கள் 14 முதல் இடங்களையும் 20 இரண்டாம் இடங்களையும் 10 மூன்றாம் இடங்களையும் பெற்று மன்னார் வலயத்தில் 153 புள்ளிகளுடன் முதல் நிலையை பெற்றுள்ளனர்.
அதே நேரம் இரண்டாம் இடத்தை 85 புள்ளிகளுடன் வங்காலை சென் ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயமும், மூன்றாம் இடத்தை 78 புள்ளிகளுடன் முருங்கன் மத்திய கல்லூரி பெற்றுக்கொண்டது.

பிற செய்திகள்