
கொழும்பு,ஜுன் 12
பிரபல வர்த்தகரும் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவருமான தம்மிக பெரேராவுக்கு எதிராக இன்று (12) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தம்மிக்கவின் கொழும்பிலுள்ள இல்லத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டுள்ளனர்.