
கொழும்பு, ஜீன் 12
ஆளும் தரப்பு அரசியல்வாதிகளை இலக்காகக் கொண்டு மே 9 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் ஒரு சில பௌத்த குருமார்கள் உள்ளார்கள் எனவும் குறிப்பிட்ட கருத்தில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. எனது கருத்துக்கு கண்டனம் வெளியிடுவதை விடுத்து முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கடந்த மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் தீக்கிரையான தனது வீட்டை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடாளுமன்றில் நான் ஆற்றிய உரைக்கு ஒரு சில மத தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிடுகின்றனர். அதிருப்தி வெளியிட வேண்டிய அவசியமில்லை முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யட்டும் என்றார்.