
ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலொன்றின் பெட்டியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.40 மணியளவில் ரம்புக்கனை ரயில் நிலையத்திலிருந்து ரயில் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், சாரதியின் உதவியாளர், ரயிலை சோதனை செய்த போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் உயிரிழந்தவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரிடமிருந்து பொல்கஹவெல தொடக்கம் பண்டாரவளை வரைக்குமான ரயில் பயணச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன என்று தெரிவித்த ரம்புக்கனைப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




