
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அன்றைய தினம் பதிவான 857 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 2 ஆயிரத்து 725 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் ஆயிரத்து 83 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊ்கப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.




