
நுவரெலியா,ஜுன் 12
நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தப்பளை, கொங்கோடியா தோட்டத்தின் 90 பேர்ச் காணி விவகாரம் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபைக்கு தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
குறித்த காணி அரசாங்கத்தால் நுவரெலியா பிரதேச சபக்கு வழங்கப்பட்டிருந்தது. அக்காணியை சபை தலைவர் வேலு யோகராஜா முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.