
வவுனியாவில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் வவுனியா நகரில் தனியாக வசித்து வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.