திருகோணமலை – சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள லிங்கபுரம் கிராமத்திற்குள் , இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளன.
இதன்போது இரண்டு வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.
அத்தோடு வீட்டிலிருந்து உபகரணங்கள் பயன்தரும் வாழை மரங்கள், கரும்பு போன்றவற்றையும் துவம்சம் செய்துள்ளது.
வீட்டிலிருந்தவர்கள் யானைகளிடமிருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
இதுகுறித்து லிங்கபுரம் பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக தமது பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதுவரை 10 பேர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.பலர் அங்கவீனம் அடைந்துள்ளனர்.
வீடுகளில் இருப்பது அச்சமாக உள்ளது.தமது உடமைகளையும், பயிர்களைகளையும் காட்டு யானைகள் அடித்து சேதமாக்கிறது.
இதுவிடயமாக அதிகாரிகளிடம் சொன்னால் அவர்களும் பெரிதாக கவனத்தில் கொள்வதில்லை.
லிங்கபுரம் பகுதியை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்க உரிய தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.




பிற செய்திகள்

