
அனுராதபுர பிரதேசத்தில் விரியன் (புடையன்) பாம்பு கடிக்கு இலக்காகி 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளான்.
பாம்புக்கடிக்கு இலக்கானவர்களுக்கு வழங்கப்படும் விச முறிவு மருந்துக்கு பின் கொடுக்கப்பட வேண்டிய அலர்ஜி தவிர்ப்பு மருந்து உரிய நேரத்தில் கிடைக்காமையே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் குறித்த மருந்து கைவசம் இல்லாத நிலையில், சுமார் 48 பார்மசிகளில் முயன்றும் குறித்த மருந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், மாணவன் பரிதாபகரமாக மரணத்தை தழுவிக் கொண்டுள்ளான் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்