முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை குருந்தூர்மலையில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கை இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,மக்களின் எதிர்ப்பால் குறித்த நிகழ்வு கைவிடப்பட்டுள்ளது.
புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் , இன்று காலை ஒன்பது மணிக்கு நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் நிகழ்விருந்தது.இதனை அடுத்து மக்களால் அங்கு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதனை அடுத்த நிகழ்வு கைவிடப்பட்டுள்ள நிலையில்,சிலையை எப்படியாவது வைத்துவிட வேண்டும் என்ற நோக்கில்,மலையின் அடிபாகத்தில் பிக்குகள் குவிந்துள்ளதால் அங்கு குழப்ப நிலை தொடர்கிறது.