நிவாரணப் பணியை இடைநிறுத்த முற்பட்ட இராணுவம்- பருத்தித்துறையில் அமைதியின்மை

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராமம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணப் பணியினை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிவாரணப் பணியானது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இராணுவத்தினருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டிருந்தது.

இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புக் கடவையில் வைத்தே முடக்கத்தில் உள்ள மக்களுக்கு அவர்களது உறவினர்கள், நிவாரணப் பொருட்கள் வழங்குவது வழமை.

இந்தநிலையில் குறித்த கடவையில் வைத்தே உலருணவுப் பொருட்கள் சுகாதார விதிமுறைக்கமையவே இடம்பெற்றது.

எனினும் நிவாரணப் பணியை நிறுத்துமாறு இராணுவத்தினர் கூறிய போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நிவாரணப்பணியை தொடர்ந்து மேற்கொண்டனர். இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *