
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட இடங்களில் நுகர்வோர் அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அலுவலகம் இன்று (12) சோதனை நடத்தி அதன் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பேரில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, புத்தளத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி வைத்து அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் இடங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் புத்தளம் மாவட்ட அலுவலக அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் புத்தளம் பொலிஸ் தலைமையகத்தினால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது சிறு கடைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்