
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நேற்றையதினம் சமர்ப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்மூலம் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜீ. எல் பீரிஸ் கூறியுள்ளார்.
அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையொன்று இன்றைய தினம் காலை ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், அதற்கிணங்க மாணவர்களை பாதிப்புகளுக்கு உள்ளாக்காமல் ஒன்லைன் கல்வியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறும் ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

