இலங்கை கடற்பரப்பில் 3500 தொன் எரிவாயு கொண்ட கப்பல் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால் ஐந்தாவது நாளாக எரிவாயுவை இறக்க முடியாமல் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் எரிவாயு சிலிண்டர்களுடன் வீதிகளில் காத்திருக்கும் நிலையில் எரிவாயு ஏற்றப்பட்ட கப்பலில் இருந்து குறித்த எரிவாயுவை இறக்குவதற்கு முடியாத நிலையில் டொலர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் எரிவாயுவினை விரைவில் கப்பலில் இருந்து இறக்கி மக்களுக்கு உடனடியாக விநியோகம் செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்