ஒரே நாளில் 4 இலட்சத்து 37ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஒரே நாளில் 4 இலட்சத்து 37ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்று (26) மாத்திரம் சுமார் 4 1/2 இலட்சம் பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின், தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,

நேற்றையதினம் (26) மாத்திரம், சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ், 356,628 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 55,722 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஃபைசர் தடுப்பூசி முதலாம் டோஸாக 108 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மொடர்னாதடுப்பூசியை முதல் டோஸாக 25,420 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் இதுவரை
கோவிஷீல்ட்:
– 1ஆவது டோஸ் – 925,242 பேர்
– 2ஆவது டோஸ் – 385,885 பேர்

சினோபார்ம்:
– 1ஆவது டோஸ் – 5,945,237 பேர்
– 2ஆவது டோஸ் – 1,482,305 பேர்

ஸ்பூட்னிக் வீ:
– 1ஆவது டோஸ் – 159,081 பேர்
– 2ஆவது டோஸ் – 14,503 பேர்

ஃபைசர்:
– 1ஆவது டோஸ் – 114,058 பேர்

மொடர்னா:
– 1ஆவது டோஸ் – 696,003 பேர்

அந்த வகையில் இதுவரை 78 இலட்சத்து 39 ஆயிரத்து 638 பேருக்கு (7,839,638) முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

18 இலட்சத்து 68 ஆயிரத்து 190 பேருக்கு (1,868,190) இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கி முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *