தமிழ் மக்களின் மனதில் நீங்கா நினைவுடன் இருக்கும் குமுதினி படகு திருத்த வேலைகளுக்காக வல்வெட்டித்துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த குறித்த படகு பலரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது திருத்த வேலைகளுக்காக நேற்று வல்வெட்டித்துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு பழுதடைந்த நிலையில் கடந்த இரு வருடங்களாக குறிகட்டுவானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த குமுதினிப் படகினை பயன்படுத்த வேண்டும் என்ற பலரின் கோரிக்கைக்கு அமைய திருத்த வேலைகளுக்காக நேற்றையதினம் வல்வெட்டித்துறை படகு திருத்துநர்களுடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரு மாதங்கள் திருத்த வேலைகள் இடம்பெறும் என தெரியவருகிறது.
கடந்த 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது


பிற செய்திகள்