கொக்குவிலில் நான்காவது கொரோனாத் தடுப்பூசி ஏற்றல்

கொரோனாப் பெருந் தொற்றுத் தடுப்பூசியின் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசி ஏற்றல் இன்று திங்கட்கிழமை, காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை கொக்குவில் வளர்மதி சன சமூக நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இதனை நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று மூன்று மாத காலத்தைப் பூர்த்தி செய்தவர்கள் மூன்றாவதாக பைஃசர் தடுப்பூசியையும், மூன்றாவதாக பைஃசர் தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதத்தின் பின்னர் நான்காவதாக பைஃசர் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தடுப்பூசியைப் பெற விருப்புபவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்களாயினும் தமது தடுப்பூசி அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையிலுள்ள வளர்மதி சன சமூக நிலையத்துக்கு நாளை காலை வருமாறும் நல்லூர் பிரதேச வைத்திய அதிகாரி மருத்துவர் அ.ஜெயக்குமாரன் அறிவித்துள்ளார்.

இதேநேரம், குறிப்பிட்ட சில நாடுகளுக்கான உள்நுழைவுத் தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்வதற்காக அவசரமாக பைஃசர் தடுப்பூசியைப் பெற விரும்புபவர்கள் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்ற நாளில் இருந்து ஒரு மாதத்தின் பின்னர் நான்காவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அவ்வாறானவர்கள் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *