
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு மாதமாகியும் நாட்டை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
‘பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினாலோ அல்லது எதிர்க்கட்சியினரோ ‘ஹரி மக’ என்ற செயற்திட்டத்தை முன்வைத்ததை தவிர பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை இதுவரை முன்வைக்க முடியவில்லை.
இதேவேளை, அவர்களால் நாட்டில் முன்வைக்கப்பட்ட செயற்திட்டமானது அமைச்சுக்களில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அதிகம் பேசப்படவில்லை.
அதற்கு பதிலாக அவர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமையே பேசுப்பொருளாக மாறியது’ என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பிரதமரின் நியமனம் முடிந்த உடனேயே அவரை சந்தித்தோம். அந்த சந்திப்பில், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், கால அடிப்படையிலான செயல்திட்டத்தை முன்வைப்பதன் முக்கியத்துவத்தை விளக்கியதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்