அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை

அரச பணியாளர்களுக்கு இன்றைய தினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சினால் இதற்கான சுற்றுநிரூபம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதற்கமைய, இன்றைய தினம் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவைகளை இன்று வழங்கவுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பூரணை விடுமுறை தினம் என்பதால் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மூடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தின் சேவைகள் வழமைப்போல் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதான காரியலயமும் ஏனைய பிராந்திய அலுவலகங்களும் வழமை போன்று இன்று திறக்கப்படும் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் சரத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *