
அனுராதபுரம், ஜுன் 13
சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட 540 சிலிண்டர்கள் அநுராதபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.
சமையல் எரிவாயு விநியோகஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான., அநுராதபுரம் சாலிய மாவத்தையிலுள்ள களஞ்சியமொன்றிலிருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட 540 சிலிண்டர்களும் 54 வெற்ற சிலிண்டர்களும் அங்கு காணப்பட்டதாக அதகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.