
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான போர் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் உக்ரைனின் ஆயுத பலத்தை தகர்க்கும் கடும் முயற்சிகளில் தற்போது ரஷ்ய இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகளின் ஆயுத உதவியில் தான் உக்ரைன் இவ்வளவு நாட்களும் போரை சமாளித்திருக்கின்றது என்றும் மேற்படி வெளிநாட்டு ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் ஆயுத கிடங்குகளை தேடி அழிக்கும் திட்டத்தில் ரஷ்யா தற்போது இறங்கியுள்ளதாகவும், இவ்வாறு வெளிநாட்டு ஆயுதங்களை ஆழித்து விட்டால் உக்ரைன் போரில் இருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்’ என ரஷ்ய போர் தளபதி ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயுத கிடங்குகளை குறிவைத்தே ரஷ்யா குண்டுகளை பொழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்