
அரச காப்புக்காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மரம் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
விசேட அதிரடிப்படை செட்டிகுளம் முகாமிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சட்விரோதமான முறையில் மரம் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை வீதியில் உள்ள முதலியார்குளம் பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அனுமதிப்பத்திரம் இன்றி காப்புக்காட்டில் இருந்த சட்டி மரக்குற்றிகளை வெட்டி போக்குவரத்துக்கு தயார் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 52 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக செட்டிகுளம் பீட் வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் கண்டெடுக்கப்பட்ட மரக்குற்றிகளில் 06 மரக்குற்றிகள், 20 சாடின் கதவு சட்டகங்கள், 31 சாடின் பலகைகள் மற்றும் 01 மரக்கட்டைகள் என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்




