வெல்லவாய – தனமல்வில வீதியின் யாலபோவ பிரதேசத்தில் தனமல்வில நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டி வலப்புறம் குறுக்கு வீதியில் திரும்பும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலமோதர பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.இவர் வீதியில் சைக்கிளில் பயணித்தவர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பிற செய்திகள்




