
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் சிவன் வீதியில் அமைந்துள்ள வாழைத் தோட்டத்துக்குள்ளிருந்து இளைஞன் ஒருவனின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.
இணுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த தங்கராசா திலீபன் என்பவரே சடலமாக இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியமையால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
அவருடன் வாழைத்தோட்டத்துக்குள் மேலும் 4 பேர் இருந்துள்ளனர் என்று தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் ,அவர்களைத் தேடி வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.