
தோல்வியுற்ற ஆட்சியாளராகியுள்ள கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வருவதற்கு பாடுபட்டது தொடர்பில் தாம் வருந்துவதாக, வியத்மக அமைப்பின் ஸ்தாபகரும், பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தான் இது தொடர்பில் மக்களிடம் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளேன்.
எனினும், ஆட்சிக்கு வந்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியது தாம் அல்ல, தோல்வியடைந்த ஆட்சியாளரே -என்றார்.
ஜனாதிபதி கோட்டாபயவின் வெற்றிக்காக வியத்மக அமைப்பை உருவாக்கி தீவிரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாலக கொடஹேவா கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் முதலிடம் ( 325,479 வாக்குகள்) பெற்றிருந்ததும் குறிப்பிடதக்கது.
பிற செய்திகள்