
சூடான், ஜுன் 13
சூடானிலுள்ள துறைமுகத்தில் கப்பல் ஒன்று கவிழ்ந்ததால் சுமார் 15,000 செம்மறி ஆடுகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளன. செங்கடலில் உள்ள, சூடானிய துறைமுகமான சுவாகனில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அளவுக்கு அதிகமான செம்மறி ஆடுகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில் இக்கப்பல் மூழ்கியுள்ளது. சூடானிலிருந்து சவூதி அரேபியாவுக்கு இந்த ஆடுகள் கொண்டுசெல்லப்படவிருந்தன.
பத்ர் 1 எனப் பெயரிடப்பட்ட இக்கப்பல் 9,000 ஆடுகளையே ஏற்றக்கூடியது எனவும் ஆனால், இக்கப்பலில், 15,800 ஆடுகள் இருந்ததாகவும், ஆனால், சூடானிய துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இக்கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிலிருந்த பெரும்பாலான மிருகங்கள் மூழ்கி உயிரிழந்துள்ளன.
இக்கப்பல் மூழ்கியமையால், துறைமுக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அத்துடன் பெரும் எண்ணிக்கையான மிருகங்கள் உயிரிழந்துள்ளமையால் சுற்றாடல் பாதிப்பும் ஏற்படவும் வாய்ப்புள்ளது என மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.