சில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே இருதரப்பு உறவு விரிசலுக்கான காரணம்!

சில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம் என சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் வெண்டி ஷெர்மன், சீனா சென்றுள்ள நிலையில், இந்த கருத்து வெளிவந்துள்ளது.

வெண்டி ஷெர்மன் அங்கு அமெரிக்கா- சீனா உறவுக்கு பொறுப்பான சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இதுகுறித்து சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஸீ பெங் கூறுகையில், ‘சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், அடக்கவும் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முயற்சிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம், சில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே ஆகும்’ என கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற 6 மாதத்துக்கு பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் சீனாவுக்கு சென்று நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *