எரிபொருள் நெருக்கடி காரணமாக தாங்கி ஊர்திகளுக்கு கிடைக்கப்பெறும் எரிபொருள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவிக்கையில்,
பெற்றோலை, காட்டிலும் டீசல் தொகையில் வீழ்ச்சி காணமுடிவதாக குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருளை மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் இன்றும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இன்றைய தினம் ஹப்புத்தளை, பண்டாரவளை, ஹல்துமுல்லை பகுதிகளில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு தலா 500 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருந்து பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்