
கொழும்பு, ஜூன் 13
இதற்கமைய MMC பெர்ணான்டோ கையளித்த இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக் கொண்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட Nalinda Ilangaokoon புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கான திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான விடயம் தொடர்பில் கடந்த வாரம் சர்ச்சைகள் எழுந்திருந்தன.
இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் வழங்கியதாக இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் MMC பெர்ணான்டோ கோப் குழுவில் தெரிவித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறித்த கருத்தை முழுமையாக நிராகரித்ததுடன், பின்னர் லங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் MMC பெர்ணான்டோ தனது கருத்தை மீளப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.