நீண்ட தூர பஸ்களுக்கு தேவையான டீசலை வழங்குவதற்கான பொறிமுறையை அறிமுகப்படுத்துமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவரிடம் எழுத்துமூல கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பஸ்களுக்கு டீசல் கையிருப்பு விடுவிக்கப்பட்டாலும், நீண்ட தூர பஸ் நடத்துனர்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில்லை என சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக குறுகிய தூர பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் இது ஒரு தற்காலிக தீர்வு என்றும், இது சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வுகளை காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்