அனுமதியின்றி விறகு ஏற்றியவர்கள் கைது!

கிளிநொச்சி-ஆனையிறவு மற்றும் பூநகரி சங்குபிட்டிப் பகுதிகளில் அனுமதியின்றி விறகு ஏற்றிக்கொண்டு வந்தவர்கள் நேற்று  கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஆனையிறவில்‌ வீதித்தடையில் ஈடுபட்ட போது அனுமதியின்றி ஏற்றிக்கொண்டு வந்த விறகுகளுடன் 6 வாகனங்களும் பூநகரி சங்குப்பிட்டி பாலத்தில் வீதித் தடையில் ஈடுபட்ட போது 2 வாகனங்களுமாக 8 வாகனங்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *