
எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியமில்லை என விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோக நெல் உற்பத்தி எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு போதுமாகவுள்ளது. சிறுபோகத்தில் 4 லட்சத்து 65 ஆயிரம் ஹெக்ரெயர் நெல் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 90 வீதமான பயிரிடும் பணிகள் பூர்த்தியாகியுள்ளது.
அத்துடன் பெரும்போகத்தின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான விளைச்சல் எதிர்வரும் மார்ச் மாத இறுதி வாரமளவில் கிடைக்கப்பெறும்.
இதேவேளை எதிர்வரும் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் நெல் இறக்குமதி செய்ய நேரிடும். அத்தோடு கூடுதல் அளவில் நெல் மற்றும் அரிசியைக் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுக்க அவற்றை சந்தைக்கு வெளிவிடுங்கள்.- என்றார்.