
இந்தியா,ஜுன் 13
இந்தியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தொகை 44 ஆயிரம் கோடி இந்திய ரூபாவைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையான 5 ஆண்டுகளுக்கான ஏல விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
இதற்கமைய 4 பிரிவுகளாக ஏல விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், A மற்றும் B ஆகிய பிரிவுகளில் போட்டியொன்றுக்கு 107 தசம் 5 கோடி ரூபா ஏலத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், A மற்றும் B ஆகிய பிரிவுகளில் IPL தொடரின் 5 வருட ஒளிபரப்பு உரிமைக்காக 44 ஆயிரத்து 75 கோடி இந்திய ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையைப் பெறவுள்ள நிறுவனங்களின் பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.