
கொழும்பு,ஜுன் 13
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் புதிய ரயில் அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பஸ் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து கண்டி வரையான சொகுசுரக கடுகதி புதிய ரயில் சேவை ஒன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளாந்தம் அதிகாலை 5.20 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
இந்த தொடருந்து காலை 8.14 அளவில் கண்டியை சென்றைடையும். குறித்த ரயில் சேவை மாலை 4.50 அளவில் கண்டி தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 அளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.