
கொழும்பு,ஜுன் 13
நாட்டில் எரிவாயு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத காரணத்தினால் 60 வீதமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் அவர்களிடமிருந்து எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஜனாதிபதியும் பிரதமரும் இதுவரை எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களும் வீட்டிலிருந்து வரும் போது உணவுப் பொட்டலத்தை கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.