
கொழும்பு,ஜுன் 13
மருந்து பற்றாக்குறை, மருந்து இருப்பு குறித்து கண்டறியும் வகையில் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவசரகால சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அடுத்து வரும் 3 முதல் 4 மாதங்களில் சுகாதார கட்டமைப்பை சரிவடையாமல் பராமரிப்பதற்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை குறைந்த பட்ச வாழ்க்கைத் தரத்தை எட்டுவதற்கு 47 தசம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom மேலும் தெரிவித்துள்ளார்.