யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வாழைத்தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது இன்றையதினம் யாழ், உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியையுடைய 36 வயதுடைய இணுவில் வடக்கைச் சேர்ந்த துரைராசா உசாந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உரும்பிராய் சிவன் வீதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் 04 இளைஞர்கள் சேர்ந்து போதை ஊசி ஏற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது அதிக போதை காரணமாக ஒருவர் சுய நினைவிழந்திருந்த சமயம் சுய நினைவை இழந்து நிலையில் ஒருவர் வீழ்ந்து கிடக்கின்றார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் போதையில் இருந்தவரை பார்த்தபோது உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
இதனால் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.





