
எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக வலுசக்தி அமைச்சு மீண்டும் உறுதி செய்துள்ளது.
இதனிடையே, போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான எரிபொருள் முன்பதிவுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் இருப்பு குறைவடைந்து வருவதாக குறித்த சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுவதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்