பாம்பு தீண்டினால்கூட சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் இல்லாத நிலையில் நாடு!

பாம்பு தீண்டினால் சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் இல்லை. எனவே பாம்பு தீண்டினால் மரணம் மட்டுமே மிஞ்சும் என்று வைத்தியர்கள் கூறும் நிலைமை தற்போது நாட்டில் உருவாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த மக்களுக்கும் உறுதியற்ற தன்மையுடன் வாழும் நிலைமையே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது.

பலபொருள் அங்காடிகளுக்குச் சென்று சிலர் கையிலிருக்கும் பணத்தை கொடுத்து கூடிய மட்டத்தில் அரிசியை சேமிக்கின்றனர்.

இன்னும் ஒரு மாதம் செல்லும்போது நாட்டில் மூன்று வேளையும் உணவு உண்ண முடியாத நிலைமை ஏற்படும் எனவே இரண்டு வேளை உண்பதற்கு தயாராகுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

எனவே நாட்டு மக்கள் கையிலிருக்கும் பணம் அனைத்தையும் கொண்டு சென்று அரிசியை வாங்கி வீடுகளில் சேமித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் ஆகும்போது 170,000 இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக விசாவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக அவர்கள் விசாவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மார்ச் மாதத்தில் 170,000 பேர் விசாவை பெற்றுக்கொண்டுள்ளார்களாயின் இந்த வருட இறுதிக்குள் 7 இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான விசாவுக்கு விண்ணப்பிப்பார்கள்.

நாட்டைவிட்டு எப்போது வெளியேறலாம் என்பதே இந்த இளைஞர்களின் நிலைப்பாடாக உள்ளது.

பாம்பு தீண்டடினால் சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் இல்லை எனவே, பாம்பு தீண்டினால் மரணம் மட்டுமே மிஞ்சும் பாதுகாப்பாக இருங்கள் என்று வைத்தியசாலைகளில் இருந்துக்கொண்டு வைத்தியர்கள் கூறிவருதை கேட்கும் நிலைமைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

விசர்நாய்க்கடிக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளும் முடிந்துவிட்டன. எனவே, விசர்நாய்க்கடித்தால் மரணமே மிஞ்சும் என்று வைத்தியர்கள் கூறுவதை கேட்க நேர்ந்துள்ளது.

வாழ முடியுமா, முடியாத என்ற சிந்திக்கும் ஒரு சமூகத்தில் நாம் தற்போது வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றறோம்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *