
நாட்டில் தற்போது அரசாங்கம் பணம் அச்சிட எடுத்திருக்கும் தீர்மானத்தால் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பதுடன் பணவீக்கமும் அதிகரிக்கும் எனவும் ஆகையால், பணம் அச்சிடும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிடவேண்டுமென பொருளாதார ஆலோசகரும் ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளருமான சீ.வை.பி ராம் தெரிவித்தார்.
பணம் அச்சிடுவதால் பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருட்களின் விலைகளும் மென்மேலும் அதிகரிக்கும். இதனால் மக்களின் கைகளில் பணம் இருந்தாலும் கொள்வனவு செய்ய பொருட்கள் இருக்காது. புதிய பிரதமர் ஆட்சிக்கு வந்த பின்னர் பொருட்களுக்கான வரியை வரியை அதிகரித்ததை தவிர வேறு எதனையும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.




