
சொந்த பிரச்சனைகள் விரோதத்தை ஏற்படுத்தாமல் நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தற்போது நாட்டிற்கு மிக அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தற்போது நாட்டில் இரண்டு விடயங்கள் பேசப்பட்டு வருகிறது. புதிய தேர்தல் குறித்தும் மற்றும் 21ம் சீர்திருத்தம் குறித்தும்.
தேர்தல் குறித்து பல கருத்துகள் இன்று கலந்துரையாடப்பட்டது. கட்சிகளில் செலவு செய்யப்படும் பணம் மற்றும் முக்கியமாக தேர்தல் ஆணையகம் சுயாதீனமாக செயற்பட வேண்டும்.
வெளிநாடுகளில் வாழும் மக்களின் வாக்குறிமை என்பன பெற முடியாத சந்தர்ப்பம் போன்றவை இன்று கலந்துரையாடப்பட்டது.
21ம் சீர்திருத்ததினுடாக தேர்தல் வைப்பது அத்தியாவசியம், தற்போது நாட்டிற்கு மிக முக்கியமானது புதிய தலைவரின் அதிகாரம்.
இத் தேர்தல் மிக அவசியம், இளைஞர்களின் கோரிக்கையால் அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் மாற வேண்டும்.
பாராளுமன்றத்தில் காணப்படும் 221 உறுப்பினர்களும் திருடர்கள் இல்லை. எனவே இவ் விடயம் தொடர்பாக அவர்களும் தயாராக உள்ளனர்.
இவ் அரசாங்கம் பழைய நிலையிலேயே உள்ளது, நாடு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் நாட்டை கட்டி எழுப்ப முயற்சி எடுக்க வேண்டும். நாட்டில் வரும் காலங்களில் மேலும் பல பாதுகாப்புகளிற்கு முகம் கொடுக்க நேரிடும்.
அதேபோல புதிய பிரதமர் மற்றும் ஜனாதிபதி வெளிநாட்டு உதவிகளை பெற்று பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை நாடுகின்றனர். IMF யுடன் கலந்துரையாடிகின்றனர்.
சொந்த பிரச்சனைகள் விரோதத்தை ஏற்படுத்தாமல் நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தற்போது நாட்டிற்கு மிக அவசியம்.- என்றார்.
பிற செய்திகள்