
நம் நாட்டில் கொள்கையை மாற்ற வேண்டும், இல்லாவிடின் தற்போதுள்ள நிலையை விட மிக மோசமாக நிலை உருவாகும் என பேராசிரியர் சந்திம விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
1947 முதல் இன்று வரை சிறிது சிறிதாக சேர்த்து வைத்த நம் நாட்டை தற்போது கொள்ளைகார்களிடம் கையளித்துள்ளோம் என்றே கூறலாம். சிறு வயது முதல் சேமிப்பிற்கு பழக்கிய இந் நாடு தற்போது பாரிய பாதிப்பிற்கு தள்ளப்பட்டுள்ளது.
உங்களுக்கு தெரியவில்லை யாரை நம்புவது என்று, அந்த அளவுக்கு பணம் கொள்ளையடிக்கப்படுள்ளது,
நம் நாட்டில் கொள்ளையடித்த நபர்கள் ஊடகத்தில் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
கொள்ளையடித்த நபர்களிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தண்டனை வழங்காமல் நீதி அற்ற நிலை காணப்படுகிறது. நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிவர்களிற்கு தண்டனை வழங்க வேண்டும்.
நம் நாடு முன்னேற வேண்டுமானால் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க கூடிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார், அன்று 103 நாடுகள் IMF ற்கு சென்றது. அவ்வாறு சென்றால் நம் நாட்டிற்கு எந்த நாடு உதவி வழங்கும், அங்கு பாதி நாடு IMF யிற்கு செல்லுமாயின் உதவி நமக்கு கிடைக்காது.
எனவேm நாம் எடுக்கும் முடிவுகள் சரியானதா என சிந்தித்து செயல்பட வேண்டும்.- என்றார்.
பிற செய்திகள்