இந்திய அதானி நிறுவனத்தின் பொக்கெட்டில் வீழ்ந்துள்ளார் கோட்டா! ரன்ஜன் ஜயலால்

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் மன்னிப்பு கேட்டு தப்பிக்க முடியாது. மாறாக தான் கோப்குழுவில் தெரிவித்த விடயம் உண்மை என தெரிவித்து பதவியை இராஜினாமா செய்திருந்தால் கெளரவமான செயலாகும் என இலங்கை மின்சாரசபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார்.

மின்சாரசபையில் தலைவர் அண்மையில் கோப் குழுவில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தாெடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் எரிசக்தி வேலைத்திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் என தான் கோப் குழுவிவின் முன் கூறியமை மன அழுத்தம் காரணமாகவே என்று தற்போழுது குறிப்பிடுவது நகைப்புக்குரிய விடயமாகும்.

அவ்வாறு இல்லாமல் தான் கோப் குழுவில் தெரிவித்தது உண்மை என தெரிவித்து, அவர் இலங்கை மின்சாரசபை தலைவர் பதவியில் இருந்து விலகி இருந்தால் கெளரவமான செயலாக இருந்திருக்கும் .

அத்துடன் இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் மாத்திரமல்ல. எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களும் அதானி நிறுவனத்தின் பொக்கெட்டில் வீழ்ந்துள்ளனர்.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு எமது நாட்டில் நிதி அல்லது முதலீட்டாளர்கள் இல்லை என்றால், அதனை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் ஆரம்பிப்பதை புரிந்துகொள்ள முடியும்.

என்றாலும் அதனை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கே வழங்கவேண்டும் என அடம்பிடிப்பதன் நோக்கம் என்ன?

அத்துடன் இலங்கை மின்சாரசபையின் முன்னாள் தலைவர் பெர்டினாண்டோ கடந்த வாரம் கோப் குழுவில் தெரிவித்த விடயம் உண்மையாகும்.

தற்போது அதனை மறுப்பது அல்லது தவறுதலாக சொல்லப்பட்டது எனக் கூறி தப்பிக்க முயலக்கூடாது. தான் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்து, இவ்வாறான பாரியதோர் கூற்றை மீளப்பெற முடியாது என்பதை ஏனைய அதிகாரிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *